அஜய் தேவ்கன் மற்றும் சுதீப் ட்வீட்டினால் இந்த கேள்வியை ஊடகங்கள் உத்தரபிரதேச அமைச்சரிடம் கொண்டு போயுள்ளது..

அஜய் தேவ்கன் மற்றும் சுதீப் ட்வீட்டினால் இந்த கேள்வியை ஊடகங்கள் உத்தரபிரதேச அமைச்சரிடம் கொண்டு போயுள்ளது..
 
முதலில் இந்த சஞ்சய் நிஷாத் பாஜகவை சேர்ந்தவர் அல்ல. நன்னீர் மீன்பிடிப்பு, படகோட்டிகளாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட நிஷாத் சமூகங்களை ஒருங்கு திரட்டும் ‘நிஷாத் கட்சி’ என்ற சாதி அமைப்பை வைத்திருக்கும் தலைவர்..
 
இவர் ஆரம்பத்தில் இருந்த கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ். அகிலேஷின் சமாஜ்வாடியோடும் கூட்டணியில் இருந்துள்ளார்..தற்போது பாஜகவோடு உள்ளார். மற்றபடி இவருக்கும் பாஜகவிற்கும் சம்பந்தம் இல்லை. பாரிவேந்தரின் கருத்துக்கு திமுக பொறுப்பில்லை என்றால், சஞ்சய் நிஷாதின் கருத்துக்கு பாஜகவும் பொறுப்பில்லை.நிற்க.
 
இங்குதான் பாஜக போன்ற தேசியவாத கட்சிக்கும் ,மாநில மற்றும் ஜாதிய கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது.. மாநில கட்சிகளும், பிராந்திய பார்வை கொண்ட ஜாதிய அமைப்புகளும் உள்நாட்டு அமைதியின்மையை உண்டு செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் அதை ஒரு தேசிய கட்சி தான் கடக்க வைக்கும்.
 
உலகிலேயே மிக பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் என்று மோடி சொல்கிற போது, மொத்த இந்தியாவும் காது கொடுத்து கேட்கிறதே… அதுதான் தேசியவாதத்தின் வல்லமை..
 
– சுந்தர்ராஜ சோழன் –

Share: