ஆன்மிகவாதிகள்
செய்யவேண்டியதை
ஆளுநர் செய்கிறார்
– தில்லை கார்த்திகேயசிவம் –
கடந்த 100 ஆண்டுதான், இங்கே பல திரிபுகளுக்கு காரணம் என்பதை, மேதகு கவர்னரும் கூறியுள்ளார்….
உண்மையில் கவர்னர் திருக்குறள் சார்ந்து இன்று பேசியதை சைவசமய உலகம் கடந்தகாலங்களில் உரக்க பேசியிருக்க வேண்டும்…
ஆனால் மிக சாதுர்யமாக பரிமேலழகர் உரையை, பாப்பான் உரை என பிரச்சாரம் செய்து, குறளுக்கு பல விபரீத உரைகளை நுழைத்துவிட்டனர்…
திருக்குறளின் அடையாளம் சிதைக்கப்படுவதை கண்டு கடந்த 100 ஆண்டில் சைவ உலகில் எதிர்கொண்டோர் இருவரே…
1) ஸ்ரீ ஈஸ்வரமூர்த்தி பிள்ளைகள்….
இவர்கள் திருக்குறள் பொதுநூல் அல்ல என ஒரு புத்தகமே வெளியிட்டார்…
2) தருமை ஆதினம் அடைஞ்ச 26வது சந்நிதானம்…
இவர்கள், குறளுக்கு விபரீத உரை எழுதி வெளியிட்ட தெய்வநாயகம் என்பவரை மடத்துக்கே வரவழைத்து, அவரைக் கண்டிக்கும் வகையில் விழிப்புணர்வு மேடை அமைத்து தந்தார். குறளின் ஆன்மீக தன்மை மாறக்கூடாது என வெகு முயற்சி எடுத்தார்கள்..
ஆனால் சைவசமயத்தினுள் இருந்த உள்கலகம், நீர்த்துப்போகவைத்துவிட்டது….
ஆனால், ஆன்மீகவாதிகள் செய்யவேண்டிய விழிப்புணர்வை மேதகு கவர்னர் செய்கிறார்….
நம் #இந்து தர்மம் மட்டுமே #சுவர்க்கம் #நகரம் பற்றிய நம்பிக்கையையும் அதுசார்ந்த சாஸ்திர விளக்கங்களையும் கொண்டுள்ளது.
மற்ற மதங்களில், சமயங்களில் இப்படியான நம்பிக்கை கிடையாது.
திருவள்ளுவ நாயனார் சுவர்க்க, நரக நம்பிக்கையை ஏற்று, தம் குறளில் அதுபற்றி பாடியுள்ளார்.
1) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்,
தெய்வத்துள் வைக்கப்படும்.
இக்குறளில் வானுலகம் என்ற சொர்க்கத்தை போற்றுகின்றார்.
2) செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
வந்த விருந்தினர்களை உபசரித்து, இன்னும் வரும் விருந்தினர்களையும் உபசரிக்க எதிர்பார்த்திருப்பவன், இறந்த பின் தோவலோகத்தில் தேவர்களால் உபச்சாரம் செய்யப்படுவான்.
இக்குறளில் தேவலோகம், தேவர்கள் நம்பிக்கை கூறப்பட்டுள்ளது.
3) நல்ஆறு எனினும் கொளல்தீது மேல் உலகம்
இல்எனினும் ஈதலே நன்று.
நன்மையடைவதற்க்கு வழியாகும் என்றாலும் பிறரிடம் யாசித்தல் தீமையாகும். சுவர்க்கம் அடைவதற்க்கு இல்லை என்றாலும், வறியோர்க்கு கொடுப்பதே நல்லது.
இக்குறளில், மேல் உலகம் ஸ்வர்க்கத்தை குறிப்பிடுகின்றார்.
4) ஒருமைச் செயலாற்றும் பேதை, எழுமையும் ,
தான்புக்கு அழுந்தும் அளறு.
அறிவில்லாதவன், இனி வரும் பிறவிகளிலும் நரகத்தில் புகுந்து அனுபவிக்கவேண்டிய பாவங்களை, ஒரு பிறப்பிலேயே செய்து முடிப்பான்.
இக்குறளில் நரகம், பாவ, புண்ணியங்களை பற்றி குறிப்பிடுகின்றார்.
5) அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
கருணை உடைய மனம்கொண்டோர்க்கு இருட்டு உலகம் என்ற துன்பைத்தை தருகின்ற நரகலோகம் செல்லும் நிலை இல்லை.
இக்குறளில் நரகலோகம் பற்றி குறிப்பிடுகின்றார்.
6) அடக்கம் அமரர்உள் உய்க்கும் அடங்காமை
ஆர்இருள் உய்த்து விடும்.
மனம் வாக்கு செயல்களில் தன்னடக்கம் கொண்டவர்கள், அக்குணம் உள்ளவர்கள் தேவலோகம் சென்று இன்பம் அனுபவிப்பார்கள். தீய குணம் கொண்டவர்கள் நரகலோகம் சென்று துன்பம் அனுபவிப்பார்கள்.
இக்குறளில் சொர்க்கம், நரகம், தேவலோகம் பற்றி குறிப்பிடுகின்றார்.