இந்தியாவின் வெளியுறவு Masterstrokes – ஒரு பார்வை | விருந்தினர் பக்கம் | Chanakyaa Article

பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. இதனால், பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், தொழிலாளர்களும் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள். போர்  தொடங்கிய இரண்டாவது நாளே, பல இந்தியர்கள் பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு மீட்டு வரப்பட்டார்கள். இதுவரை 20,000க்கும்  மேற்பட்ட இந்தியர்களை பிரதமர் நரேந்திர மோடி, “OPERATION  GANGA” என்ற செயல் திட்டத்தின் கீழ் மீட்டு, தாயகம் அழைத்து வந்துள்ளார்.

 

 

இந்தியர்கள் மட்டுமின்றி, அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளனர்.  இப்படி அந்நிய போர்க்களத்தில் இந்தியர்கள் மீட்கப்படுவது இது முதல் முறை அல்ல. ஆகஸ்ட் 1990ஆம் ஆண்டு மத்திய கிழக்கின் லாபகரமான எண்ணெய் விநியோகத்தின் மீது உள்ள கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான முயற்சியில், குவைத் நாட்டின் கிழக்கு பகுதியை ஈராக் ஆக்கிரமித்தது. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் ‘ஈராக் சர்வாதிகாரி’ சதாம் ஹுசைனை குவைத்தில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் சதாம் மறுத்துவிட்டார்.  ஈராக்கிற்கும் அமெரிக்கா தலைமையிலான 28  நாடுகள் அடங்கிய  கூட்டுப் படையினருக்கும் இடையே நடந்த சண்டை, முதலாம் வளைகுடாப் போராக மாறியது. அப்போது இந்திய பிரதமராக இருந்த V.P சிங், போர்  தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே, இந்தியர்களை தாய்நாட்டிக்கு பத்திரமாக அழைத்து வந்தார். ஒருவேளை போர் நடக்காமல் இருந்திருந்தால் வேலையின்மை, இருப்பிடம் போன்ற மக்களின்  அனைத்து கேள்விகளையும் அறிந்தே இந்த சவாலை தைரியமாக கையாண்டார்.  மற்றொரு சம்பவம், 2006ஆம் ஆண்டு நடந்த இஸ்ரேல் -லெபனான் போர். அப்போது லெபணான் நிலைகள் மீது இஸ்ரேல் குண்டு போட தொடங்கியது. மேலும் லெபணான் கடற்கரையில் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு சிக்கிய இலங்கை மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 2,300 பேரை, போர்  வளையத்திலிருந்து இந்தியா, தனது சிறந்த மீட்பு நடவடிக்கைகளால் சொந்த நாட்டுக்கு அழைத்து வந்தது.  அன்று முதல் இன்று வரை, தன் மக்களையும் தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் காப்பதில் இந்தியா ஒரு முன் உதாரணமாக திகழ்கிறது. – அஞ்சு ஜெ.ச

Share:

Leave a Reply

Your email address will not be published.