ஓய்வுபெற்ற நீதிபதி மாண்பமை திரு. சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் ஒரு குழு

ஓய்வுபெற்ற நீதிபதி மாண்பமை திரு. சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து,

தமிழகத்தில் எந்தக் கோயில்கள் எல்லாம் ஆகமகோயில் அல்லது ஆகமம் பின்பற்றப்படுகிறது என அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு இடப்பட்டுள்ளது…

எவையெல்லாம் ஆகமகோயில் அல்லது ஆகமம் பின்பற்றப்படுகிறது என கணக்கெடுத்தால்… தமிழகத்தில் 99% ஆகம கோயிலே ஆகும்…

அதாவது எப்பொழுது ஒரு கோயில் கருவறை // அர்த்தமண்டபம் / கோபுரம் // விமானம் /ஸ்தூபி (கலசம்) என அமைக்கப்படுகிறதோ, அப்பொழுதே அது ஆகமக்கோயிலாகிவிடுகிறது… காரணம் ஆகமங்களில் மட்டுமே கோயில் கட்டுமானம் + பூஜைகள் பற்றிய தகவல்கள் குறிப்புகள் உள்ளன…

இதன்படி பார்த்தால் சைவ / வைணவ ஆலயங்களை தாண்டி மாரி / காளி // ஐயனார் / முனிஸ்வரன் என்ற கிராம தேவதை கோயில்களும் கோபுரம் / விமானம் / ஸ்தூபி / மண்டபம் என அமைக்கப்பட்டிருந்தால் அதுவும் ஆகமக்கோயிலே ஆகும்…

ஏன், மடங்கள் அமைப்பு / மடங்களில் இருந்த குருவின் திருவுருவ பிரதிஷ்டை / மடங்களில் நடக்கும் சமாதி பிரதிஷ்டைகளும் ஆகமங்களின்படியே ஆகும்…

எனவே ஆகமக்கோயில் என கணக்கெடுத்தால் இங்கே 99% கோயிலும் ஆகமகோயிலே ஆகும்…

எங்கேனும் விமானம் / கோபுரம் இல்லாமல் வானம்பார்த்த வெட்டவெளியில் உள்ள கோயிலை வேண்டுமானால் ஆகமக்கோயில் அல்ல என கூறலாம்…

எனவே ஆகம கோயிலா என்று கணக்கெடுப்பதை விட,

பூஜை உரிமை எந்த சம்பிரதாயப்படி அல்லது எந்த மரபுக்கு என்பதே வழக்கின் மையமான கோரிக்கை என்பதால்,

1) ஆகமங்களின்படி கும்பாபிஷேகம் / பூஜை நடக்கும் கோயில் எவை?
2) ஆகமங்களின்படி பிரதிஷ்டை நடத்தப்பட்டு, மற்ற வழி பூஜை நடக்கும் கோயில் எவை….
3) குறிப்பிட்ட மரபுதான் பூஜைஉரிமைக்கு என்ற விதி இல்லாத கோயில் எவை….

என கணக்கெடுக்க வேண்டும்…

இவற்றில் முதல் இருவகை கோயிலிலும் பூஜை உரிமை எந்த மரபுக்கு உண்டு என்றபடியான ஒரு தெளிவான கணக்கெடுப்பு தான் தேவை…

ஏனெனில் தமிழகத்தில் இந்த அர்ச்சகர் பிரச்சனை என்பது சுமார் 100 ஆண்டுகளாக ஒரு தொடர் பிரச்சனையாக இருந்துகொண்டிருக்கின்றது…

இதனால் பல பாரம்பர்ய அர்ச்சககுடிகள் கடந்த 100 ஆண்டுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்… பல அர்ச்சகுடி குடும்பங்கள், நாடோடிகளாக உலவுகின்றனர்…

1) ஆகமப்படி பூஜை நடக்கும் கோயில்கள் எனும்பொழுது அவற்றில் பெரும்பாலும் சிவ / வைணவ ஆலயங்கள் வந்துவிடும்… பல முருகர் ஆலயங்களும், அடிப்படையில் சிவாலயமே ஆகும்…

இந்த சைவ / வைணவ ஆலயங்களில் பூஜை உரிமை எந்த மரபுக்குரியது என்பது தெளிவாக்கப்பட வேண்டும்…
அதாவது இந்த மரபே இக்கோயிலில் பூஜைஉரிமை என தெளிவாக்கப்படவேண்டும்…

அதாவது இவை ஒவ்வொரு கோயிலுக்கு தனிதனியாக ஆவணரீதியாக தெளிவாக்கப்பட வேண்டும்.

2) அடுத்து இரண்டாவது வகை,
ஆகமப் பிரதிஷ்டை. ஆனால் பூஜை உரிமை மற்ற மரபுக்கு – என்ற கோயில்கள் எவை எவை என கணக்கெடுக்க வேண்டும்…

அதாவது கிராமங்களில் பெரும்பாலும் மாரியம்மன், ஐயனார் கோயில் பிரதிஷ்டை அதாவது கும்பாபிஷேகம் ஆகமப்படியே…..
ஆனால் பூஜை உரிமை பூசாரிகளுடையது…

மேல்மலையனூர் / சிறுவாச்சூர் / வெக்காளியம்மன் என தமிழக அளவில் பல பெரிய கோயில்களில் பிரதிஷ்டை ஆகமப்படியே நடக்கின்றது… ஆனால் பூஜை உரிமை வேறு மரபுக்கு… அதாவது பூசாரிகுடிகளுக்கு..

திருவானைக்கா ஆகமப்படி பிரதிஷ்டை.. பூஜை உரிமை வேறு மரபு… இப்படியாக உள்ளவை…

ஏன் சைவமடங்களில் கூட பிரதிஷ்டை ஆகமப்படியே… ஆனால் பூஜைஉரிமை மடாதிபதிகளுடையது…

3) மூன்றாவது வகை கோயில்களும் தமிழகத்தில் சில உள்ளன.. அங்கே, குறிப்பிட்ட மரபுக்குதான் பூஜை உரிமை என்று இல்லாத பொதுவகை கோயில்….

இப்படியாக மூன்றுவகை கணக்கெடுப்பு செய்தால் தெளிவான வழி பிறக்கும் என்பது எனது எண்ணம்…

இவையன்றி, ஆகமங்களில் இல்லாத, பௌராணிகப்படியான தேவதைகளாகிய தர்மராஜா கோயில் /அர்ஜுனன் கோயில் / அரிச்சந்திரன் கோயில் என பிராணப்பிரதிஷ்டை வகை கோயிலும் உள்ளன.. ஆனால் இவை, கிராம மக்கள் அல்லது குலதெய்வ மக்கள் கட்டுப்பாட்டில் உள்ளவை…
சிவார்ப்பணம்.

– தில்லை கார்த்திகேயசிவம் –

#ஆகமக்கோயில்,
#ஆகமப்பிரதிஷ்டை
#பூஜைஉரிமை

Share: