கோயில் அரசியலும் சமயஅதிகார பறிப்பும்…

கோயில் அரசியலும்

சமயஅதிகார பறிப்பும்…
தமிழக கோயில்கள் சிலவற்றில் படம் பிடிக்க அனுமதியில்லை என்ற கெடுபிடி உண்டு……
அதில், நான் அறிந்தவரை சிதம்பரம் முக்கிய கோயிலாகும்….
சுமார் 23 ஆண்டுகளாக தில்லை தேர் தரிசனம் செய்து வருகிறேன்…
கடந்த காலங்களில் தேர் ஊர்வலத்தையோ / உத்ஸவ புறப்பாட்டையோ படம் பிடிப்பது கடினம்… அப்படியே படம் பிடித்தாலும், மிக தொலைவில் பதற்றத்தோடு போட்டோ எடுக்கமுடியும்… 2019 வரை இதே நிலைதான்..
தில்லை தேர் மாடவீதிகளில் வலம் வரும்பொழுது மாடிகளில் / மேல் மாடங்களில் நின்று படம் பிடிப்பதைக் கூட தடுப்பார்கள் தீக்ஷிதர்கள்… தேரோடு வரும் பக்தர்களும் குரல் கொடுப்பார்கள்… கேமாராவை எடுப்பதே அசாதாரணம்..
நடுவில் இரண்டு ஆண்டு, கொரானாவால் தேர் விழா ஒரு முறை தடைபட்டது..
இந்த ஆண்டு தில்லை தேர் தரிசனம் செய்தபொழுது, தேரை நேருக்கு நேர் படம் பிடிப்பது / focus செய்வது என நடந்தது… எந்தத் தடையும் இல்லை / எதிர்க் குரலும் இல்லை… நான் பார்த்தவரை…!
இங்கு கூறவரும் விஷயம் போட்டோ எடுப்பதோ படம் பிடிப்பதோ அல்ல… அது அவரவர் விருப்பம்.
இங்கு பதிவு, கோயில் அரசியல் பற்றியது… கோயில் அந்தணர்களுக்கு படிப்படியாக தரப்படும் நெருக்கடி பற்றியது…
எத்தகைய ஒரு நெருக்கடி இருந்தால், தில்லையில் படம் பிடிப்பதை கண்டும் காணாமல் இருக்கும் நிலை தீக்ஷிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும்….
இவர்களிடம் ஏதேனும் குற்றம் கண்டுபிடிக்க முடியாதா என பலரும் அலையும் நிலையில், படம் எடுக்காதே எனக் கூறி, அதில் ஏதேனும் பிரச்சனை வளர்ந்துவிடக் கூடாது என்றே, தீக்ஷிதர்கள் கடந்துசெல்கிறார்கள் என்பதே எனது கணிப்பு…
இதைப் பார்க்கையில், அர்ச்சககுடி முன்னோர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள்…
ஓரளவு கூட்டுபலம் / நீதிமன்ற உத்தரவு / சாதி ஆதரவு என இருக்கும்பொழுதே தீக்ஷிதர்களுக்கு தரப்படும் நெருக்கடியில் சில கொள்கைகளை தளர்த்த வேண்டிய சூழல் / கடந்து செல்லும் சூழலை காணும்பொழுது..
கடந்த 50/60 ஆண்டுகளில் அர்ச்சககுடி முன்னோர்கள் எவ்வித உரிமை / சட்ட பாதுகாப்பும் இல்லாத நிலையில் எப்படியெல்லாம் கோயில் நியமங்களை கடைப்பிடிப்பதில் எதிர்ப்பை சந்தித்திருப்பார்கள் என்பதை உணர முடிகின்றது.
அர்ச்சகர்களின் இன்றைய இயந்திரத்தனமான செயலுக்கு காரணமே, கடந்த காலங்களில் அர்ச்சகர்கள் கூறிய வார்த்தையை திராவிட மயக்கத்தில் இருந்த இச்சமூகம் மதிக்காமல் அவமதித்தே ஆகும்…
அர்ச்சககுடிகளுக்கு 50/60 ஆண்டுகளாக ஏற்பட்ட நெருக்கடி /படிப்படியாக சமய உரிமை / அதிகாரத்தை பறிக்கும் கோயில் அரசியல் சூது, இப்பொழுது தீக்ஷிதர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்..
தில்லைக் கூத்தனே அவர்களுக்குத் துணை..
ஒருவனை நேரடியாக எதிர்க்க முடியவில்லை எனில் அவன் வயிற்றில் அடி என்று ஒரு சூதுசொல் உண்டு…
கோயில்குடிகளை பொருத்தவரை கடந்த 50 ஆண்டுகளாக இதுவே நடந்துவருகிறது…!
சிவார்ப்பணம்
– கார்த்திகேய சிவம் –

Share: