தடுமாற்றத்தில் அர்ச்சக குடிகள்

தடுமாற்றத்தில் அர்ச்சக குடிகள்

Chain reactions என ஒன்று உண்டு…

அதாவது ஒரு செயலால் ஏற்படும் மறைமுக தொடர் பின் விளைவுகள்… இந்தத் தொடர் பின்விளைவுகள் பொதுப் பார்வைக்கு வருவதில்லை…

பாரம்பர்ய அர்ச்சககுடிகள் உரிமைக்கு எதிராக கடந்த 75 ஆண்டுகளாக சட்டம் இயற்றும்பொழுது எல்லாம் ,
#ஒவ்வொருமுறையும், குறிப்பிட்ட அளவு அர்சசகர் குடும்பங்கள், கோயில் கைங்கர்யத்தில் இருந்து விலகி அல்லது விலக்கப்பட்டு, தடுமாறி போய்விடுகிறார்கள்… திசைதெரியாமல் உழல்கிறார்கள்…

சமீபத்து செயல்பாட்டின் பின் விளைவால், சில அர்ச்சககுடி குடும்பம், தம் வாரிசுகளை வேத ஆகமம் படிக்க அனுப்பாமல், முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள்…

இவர்களுக்கு இரண்டே வழிதான் உள்ளது..

1) வேத ஆகமம் படித்தால்

தமிழகத்தில் பாரம்பர்ய தம் கோயில் பூஜை உரிமை நிலையானதா என்ற தடுமாற்றம்… வாழ்வியல் பயம் உள்ளது..

ஆகமம் படித்து வெளிநாடு செல்வது பெரியதொரு சிறப்பாக இல்லை. வரும்காலம் மிக கடினம்..

வேத ஆகமம் படித்து கர்நாடகா / ஆந்திரா என சென்றால் மரியாதை / மதிப்பு நிறையவே உள்ளது..

அடுத்து நகரத்து தனியார் கோயில்களில் அடைக்கலமாவது. அல்லது மடம் / ஆஸ்ரமம் என்ற நிர்வாகத்தில் உள்ள கோயில்களில் அடைக்கலமாவது…

2) பள்ளி& கல்லூரி படித்தால்

அரசு வேலைக்கு செல்லலாம் என்றால் இன்றைய இடஒதுக்கீடு, அர்ச்சககுடிகளை ஏற்காது. வெல்வது மிக மிக கடினம்..

சரி பொது வேலை / தனியார் வேலையில் நுழையலாம் என்றால், நமக்கு முன் நம் குடும்பம் சார்ந்தோ / உறவினர் சார்ந்தோ இப்படியான அமைப்பில் இருந்தால், கைபிடித்து ஏற சௌகர்யமாக இருக்கும்..
ஆனால் மற்றவர்களை நம்பி செல்லும்பொழுது கடின போட்டிகளும் / ஏமாற்றங்களும் அதிகம்…..
சாதித்து நிலைநிற்பது என்பது சவாலானது…

மத்திய அரசு வேலையில் EWS ஓரளவு பயன்தருகின்றது…

பொற்றோர்கள் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள் என்பது மட்டும் நிதர்சனம்..

சிவார்ப்பணம்.

– கார்த்திகேய சிவம் –

Share: