தனக்குத்தானே குழி பறித்த நித்திஷ்..!

பாஜகவை எதிர்க்க, மோடிக்கு எதிராக காங்கிரஸ் இல்லாமல் இன்னொரு முகத்தை பிரதமர் வேட்பாளர் என மக்கள் நம்புவது நடக்காத காரியம். அதே போல காங்கிரஸ் இல்லாமல் ஒரு அணியை கட்ட முடியும் என்பதும் சாத்தியமில்லை.
மோடியை எதிர்த்து ஒரு மாநில கட்சியால், தன் மாநிலத்தில் சீட் எடுக்க முடியும். ஆனால் ஒருபோதும் இந்தியா முழுமைக்குமான முகமாக எந்தத் தலைவரும் இன்றில்லை. அதிலும் நித்திஷ் எல்லாம், பீஹாரிலேயே வெறும் 15% வாக்குகளை மட்டுமே தேக்கி நிறுத்தக்கூடிய ஆளுமை. அவ்வளவுதான்.
OBC என்கிற புள்ளியில் மோடியை சேலேஞ்ச் செய்யக்கூடிய தலைமை இனி உருவாகவே முடியாது. வட இந்திய OBC எழுச்சியை மோடிக்கு பின்,மோடிக்கு முன் என்று பிரித்துப் பார்க்க வேண்டும். மண்டலுக்கு பிறகான OBC இயக்கங்கள் இன்று ஹிந்துத்துவ பெருங்குடையில் ஐக்கியமாகி வருகின்றன.
நித்திஷ் போன்ற சோஷியலிஸ்ட் / OBC அரசியல் யுக்தியாளர்கள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டார்கள். லாலு எதிர்ப்பு என்கிற புள்ளியில் பாஜகதான் நித்திஷின் போதாமைகளை மறைத்து, அவரை வாழ வைத்தது. ஆனால் அடிப்படை நன்றி விஸ்வாசமோ, நேர்மையோ இல்லாதவர் நித்திஷ். மோடியின் மீதான அவரது பொறாமைக்கு, எல்லையே கிடையாது. நிற்க.
2024 தேர்தலில் நித்திஷை காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால், அதோடு ராகுல்காந்தியின் அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகிவிடும். 2024ல் தோல்விதான் என்று தெரிந்தாலும், மாற்று சக்தி, தானே என்பதை காங்கிரஸ் நிறுவத் தவறினால், 2029 தேர்தலில் காங்கிரஸ் என்கிற கட்சி, ஆட்டத்திலேயே இருக்காது. மாநிலங்களில் காங்கிரஸ் தன்னை அடமானம் வைப்பதே, மத்தியில் தன்னை அவர்கள் ஆதரிக்க வேண்டும் என்பதால் தான்.
எனவே, நித்திஷ் பிரதமர் வேட்பாளராக ஆக வாய்ப்பில்லை. தன்னுடைய அரசியல் வாழ்வை நீட்டிக்க நினைக்கிறார். பாஜக தன்னை விழுங்கிவிடுமோ என்கிற பயம் அவரை இந்த வேலையைச் செய்ய வைக்கிறது. இந்த கூட்டணி ஆறு மாதம் கூட நிம்மதியாக நகர முடியாது. நித்திஷிற்கு மோசமான இரவுகளை பரிசாகத் தருவார்கள் லாலு மகன்கள்.
சர்வ நிச்சயமாக JDU உடைந்துவிடும். 2024க்கு நீண்ட தூரம் உள்ளது. பாஜகவிற்கான வாய்ப்பை நித்திஷே பீஹாரில் பெரிதாக்கிவிட்டார். You do the first move then i will split you என்பதுதான் இனி கணக்கு. நித்திஷின் மீது எந்த ஈவு இரக்கமும் பார்க்காமல் All out warக்கு பாஜகவை தள்ளிவிட்டார், அதற்கான பரிபூரணமான நேரத்தையும் வழங்கி!
– சுந்தரராஜ சோழன் –

Share: