தமிழ் கடவுள், தமிழர் திருவிழா என்றெல்லாம் சுருக்குவது பிரித்தாளும் சூழ்ச்சியின் மிச்ச எச்சம் மட்டும் தான்.

தமிழ் கடவுள், தமிழர் திருவிழா என்றெல்லாம் சுருக்குவது பிரித்தாளும் சூழ்ச்சியின் மிச்ச எச்சம் மட்டும் தான்.

இமயம் முதல் குமரி வரை ஏன் காந்தாரம் வரை கூட இதே இறை வழிபாடு, இதே பண்டிகைகள் காலகாலமாக கொண்டாடப்பட்டே வந்திருக்கின்றன.

நம்மைப் போலவே அறுவடைத்திருநாளாகவோ சூரியன் தட்சிணாயனத்தில் இருந்து உத்திராயணத்திற்கு மாறும் காலமாகவோ தான், எங்கும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது.

அது தமிழகத்தில் தை முதல் நாள்,
ஹரியானா, பஞ்சாப், ஹிமாசல பிரதேசத்தில் மக முதல் நாள்,
குஜராத், ராஜஸ்தானில் உத்திராயணா,
அஸ்ஸாமில் மக பிஹு.
வங்கதேசத்தில் சக்ரைன்.

மாதங்களின் பெயர் ஊருக்கேற்றவாறு மொழிக்கேற்றவாறு மாறினாலும், சூரியன் மகரக்கட்டத்திற்கு வருவதே கணக்கு.

இந்துக் கடவுள்களை தமிழ்க் கடவுளா, தெலுங்கு கடவுளா என ஆயிரெத்தெட்டு மொழி, இன, சர்டிஃபிகேட் கேட்பது போல வேறெந்த நம்பிக்கைக்கும் யாரும் கேட்பதுமில்லை; தரவேண்டியதும் இல்லை.

இந்துக்கள் மட்டும் தான், நம் நிலத்தில் இருந்துகொண்டே நம் இருப்பை தக்கவைக்க போராடிக்கொண்டே இருக்க வேண்டும் என்றால், கூடவே, நாம் கும்பிடும் இறைக்கும் சேர்த்து போராடியே ஆகவேண்டும் போல!

தமிழ்க் கடவுள், முப்பாட்டன் என்பதெல்லாம் இறுதியில், “உங்களுக்கு இருந்தது நடுகல் வழிபாடு, முன்னோர் வழிபாடு, மூத்தோர் வழிபாடு மட்டுமே. பரலோக தேவனான ஒரே இறைவனை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்பதில் தான் முடியும்.

பாரதீயர்கள் எப்போதுமே கூட்டுக்குடும்பமாக, வீடு நிறைய மனிதர்கள் இருக்க வாழ்ந்து வந்தவர்கள். இறையும் அவர்களுக்கு அப்படியே!

முருகனை குழந்தையாக கொஞ்சவும்,
கண்ணனை காதலனாக பார்க்கவும்,
பாலாதிரிபுரசுந்தரி என பெண் குழந்தையாக கொண்டாடுவதும்,
என் அப்பன் சிவன் என சரணடைவதும்,
பிரசவகாலத்திலும் தாயுமானவராக மாறி அப்பன் சிவனே வருவதும், இங்கு இதை ஒட்டி தான்.

தவிர யானை, குரங்கு, நாய் அனைத்தும் நம் வீட்டில் ஒருவரே. நம்மை காக்கும் அனைத்தும் அன்பு செலுத்தும் அனைத்தும் நமக்கு இறையும் கூட!

இவர் தான் இவர் ஒருவர் மட்டும் தான் என அன்பை சுருக்கிக்கொள்ளும் வழமை, நம் வாழ்வியலிலும் இல்லை இறையியலிலும் இல்லை!

– ஸ்ரீ –

Share: