நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் ஒன்று சேர்கிறார்களா ? | Muthirai Article

நடிகை சமந்தாவும் , நாக சைதன்யாவும் 8 வருடமாக காதலித்து 2017 அக்டோபரில் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இந்த திருமணம் நான்கு வருடங்களிலேயே கசந்து, கடந்த வருடம் அக்டோபர் 2 ஆம் தேதி தங்கள் திருமண முறிவை அறிவித்தனர்.

 

 

எப்படி தற்பொழுது தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு பேசும் பொருளாக இருந்திருக்கிறதோ, அதுபோல கடந்த வருடம் சமந்தா – நாக சைதன்யா பிரிவு பேசும் பொருளாக இருந்தது. முதலில் சமந்தா, நாக சைதன்யாவின் குடும்ப பெயரான ” அக்கினேனி ” என்பதை நீக்கியதில் பிரச்சினை ஆரம்பித்து பிறகு கடந்த அக்டோபரில் தங்களது பிரிவை ஒன்றாக அறிவித்தனர்.

நானும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிந்து செல்லலாம் முடிவெடுத்திருக்கிறோம். 10 ஆண்டுகளுக்கு மேலான எங்களுடைய ஆழமான, அழகான நட்பு எங்களை அதிர்ஷ்டசாலிகளாக என்றும் ஒன்றாக இணைத்து வைத்திருக்கும் என்று நினைத்திருந்தோம். எங்களின் நட்பே திருமண உறவுக்கு மிக முக்கியமான அம்சமாக இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக தற்பொழுது நாங்கள், எங்கள் வழியில் பிரிந்து செல்ல முடிவு செய்து இருக்கிறோம் என்று சொல்லியிருந்தார்.

 

 

பிரிவு செய்தியை வெளியிட்ட பிறகு, நாக சைதன்யாவுடன் தான் ஒன்றாக இருந்த அனைத்து புகைப்படங்களையும் அனைத்து சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கினார். தற்போது திடீரென சமூக வலைத்தளங்களில் 2021 அக்டோபர் இரண்டாம் தேதி பதிவிட்டு இருந்த பிரிவை ” கொஞ்சம் நடுவுல பக்கத்த காணும் ” என்று விவாகரத்து பற்றிய செய்தியையும் நீக்கி இருப்பது பேசும் பொருளாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி மீண்டும் இணையப் போகிறார்களா? என்று புருவத்தை உயர்த்தி, அனைத்து ஊடகங்கள் மத்தியிலும், சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பேச வைத்திருக்கிறது. ஆனால் இன்னும் நாக சைதன்யா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அக்டோபர் இரண்டாம் தேதி பதிவிட்ட பதிவை அப்படியே வைத்திருக்கிறார்.

ஒருவேளை அந்தப் பதிவு, நாக சைதன்யாவுடன் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் வகையில் இருப்பதால், அவரை மொத்தமாக மறந்து, மீண்டும் ஒரு புத்தம் புதிய துவக்கத்தை துவக்கலாம் என்று கூட நீக்கி இருக்கலாம் என்று சமந்தாவின் ரசிகர்கள் கூறுகின்றனர்.

 

 

அக்டோபர் 8ஆம் தேதி சமூக வலைதளத்தில், பலரும் நான் நாக சைதன்யான்யாவை திருமணம் செய்தது பணத்துக்காகவும், புகழுக்காகவும் என்று கூறுகின்றனர். மேலும் எனக்கு இன்னொரு தொடர்பு இருந்தது என்றும், குழந்தைகள் வேண்டாம் என்று பல தடவை கருகலைப்பு செய்தேன் என்றும் பலவிதமாக பழி போடுகின்றனர். ஆனால் அதெல்லாம் இந்த விவாகரத்தை விட பெரிது கிடையாது. என் மேல் பழிபோட்டு என்னை முடக்க முடியாது என்று தன்னம்பிக்கையோடு கூறியிருந்தார். தற்பொழுது அதே தன்னம்பிக்கையோடு நான் மீண்டும் வந்துவிட்டேன் என்று சொல்லு என்று ஊருக்கும், உலகுக்கும் சொல்ல எல்லாவற்றையும் அழித்து விட்டாரா மிஸ் சமந்தா ரூத் பிரபு.

Share: