பிக்பாஸ் அல்டிமேட்.. யார் யார் போட்டி? | Muthirai Article

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் சமீபத்தில் தான் முடிந்தது, இதில் ராஜு டைட்டில் வின்னராகவும், பிரியங்கா இரண்டாவது இடத்தையும் பெற்றனர்.

 

 

பிக்பாஸ் ஹிந்தி ரசிகர்களுக்காக, பிக்பாஸ் ஓடிடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே போல தமிழிலும் பிக்பாஸ் அல்டிமேட் என்று ஒளிபரப்ப இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசனே தொகுத்து வழங்குவதாக சமீபத்தில் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமோவில் இருந்து தெரியவந்துள்ளது.

 

 

கடந்த 5 சீசனிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை தவிர மீதமுள்ள போட்டியாளர்களில் 13 பேர் தேர்வு செய்யப்பட்டு, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 13 போட்டியாளர்கள் பட்டியலும் வெளிவந்துள்ளது:

வனிதா விஜயகுமார், பரணி, சுரேஷ் சக்ரவர்த்தி, சினேகன், அபிராமி, சுஜா வருணி, சாரிக், தாடி பாலாஜி, அனிதா சம்பத் மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். குறிப்பாக வனிதா விஜயகுமார் போட்டியிடுவதால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக செல்லும். விஜய் டிவி நிறுவனமும், பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துபவர்கள் மற்றும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

Share: