பிரதமர் இந்திரா படுகொலையும்.. SPGயும்…! 

எப்படி உதயமானது SPG!

 

Tell me briefly about Indira Gandhi's murder ..​ - Brainly.in

 

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்ட ‘பாதுகாப்பு மீறல்’ நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் வழக்கம்போல இதையும் விட்டுவைக்கவில்லை. ஆனால், நாம் இதை எளிதில் கடந்து செல்ல முடியாது! இதுகுறித்து உள்துறை அமைச்சகம், புதன் கிழமை (ஜனவரி 5) பஞ்சாபில் பிரதமருக்கு நடந்தது SPG (Special Protection Group) சட்டத்தை மீறும் செயல்பாடாகும். SPG நிர்ணயித்த நெறிமுறைகளை பஞ்சாப் மாநில அரசு பின்பற்றத் தவறியதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிக்கை வெளியிட்டனர்.

பாதுகாப்பு வல்லுனர்களான சஷிகாந்த் (முன்னாள் டிஜிபி பஞ்சாப்), பிரகாஷ் சிங் (முன்னாள் டிஜிபி உ.பி), கிரண் பேடி போன்றவர்கள், பஞ்சாப் அரசும், காவல்துறையுமே இந்த பாதுகாப்பு மீறலுக்கு பொறுப்பு என்கின்றனர். பொதுவாக, பிரதமரின் பாதுகாப்பை SPG உறுதி செய்கிறது. சிறப்பு பாதுகாப்பு சட்டம் (SPG), 1988ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்கு பிறகு, பாராளுமன்றத்தால் நிறைவேற்றபட்டது. பின்னர் 2019ல் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்தச் சட்டம் இந்திய பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களின் அதிகாரப்பூர்வ வீட்டில் வசிக்கும் மக்கள், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு முழு பாதுகாப்பை வழங்குகிறது. இது பிரதமரின் பயணம், வசிப்பிடம் மற்றும் பிற செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு “நெருங்கிய பாதுகாப்பை’ (Proximate security) உறுதி செய்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட, பின்னர் இந்தச் சட்டம், அனைத்து முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்பங்களுக்கும் பாதுகாப்பை நீடித்தது. ஆனால் 2019ல் கொண்டு வந்து சில மாற்றங்களின் படி, முன்னாள் பிரதமர்கள், பதவியிலிருந்து விலகிய ஒரு வருடத்திற்கு மட்டுமே SPG பாதுகாப்பு வழங்கப்படும்.

 

SPG only secures PM, CRPF covers 56 VIPs: Govt

 

 

இன்றைய நிலையில் SPG பாதுகாப்பு, பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பிரதமரை காக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் “ஆயுதம் ஏந்திய குழுவினர்”. SPG தனது உறுப்பினர்களை, மத்திய ஆயுத காவல் படையில் இருந்து, மூன்று கட்ட செயல்முறை தேர்வுக்கு பிறகு பணியமர்த்துகிறது. என்ன தான் SPG, முழு பாதுகாப்பை வழங்க முற்பட்டாலும், பிரிவு 14, SPG சட்டத்தின் கீழ், பிரதமரின் பயணத்தின்போது SPGக்கு அனைத்து உதவியையும் மாநில அரசு வழங்க வேண்டும் என்று உள்ளது. மேலும் SPG ‘குழுவிற்கு உதவி’ என்ற தலைப்பின் படி பிரதமரின் பாதுகாப்பை மத்திய அரசின் ஒவ்வொரு அமைச்சகம், மாநில அரசு, யூனியன் பிரதேச நிர்வாகம் மற்றும் எல்லா இந்திய தூதரகமும் துணை நிற்பது கடமையாகும்.

மாநிலங்களுக்கு பிரதமர் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய ‘ப்ளூ புக்’ கில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை SPG பின்பற்றுகிறது.  ப்ளூ புக், பிரதம மந்திரியின் வருகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பே, பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட மாநிலத்தின் புலனாய்வு அதிகாரிகள், மாநில காவல்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் உட்பட அனைவரும் SPGக்கு ஒரு அட்வான்ஸ் செக்யூரிட்டி தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

பிரதமரின் பயணத்தில் சாலையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மாநில காவல் துறையின் பொறுப்பாகும். மேலும் பிரதமரின் வருகையில் டிஜிபி அல்லது நியமிக்கப்பட்ட அதிகாரி கண்டிப்பாக அந்த அணிவகுப்பில் பயணிக்க வேண்டும் என்பது ‘நிலையான செயல்முறை திட்டத்தின்’ (SOP) ஒரு பகுதியாகும். ஆனால், பஞ்சாப் காவல் துறை அதிகாரி யாரும், பிரதமர் சிக்கிக் கொண்டிருந்த அந்த 15 நிமிடமும் அங்கு தென்படவே இல்லை. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இதை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. மாநில அரசு அதில் முரண்படவே, உச்ச நீதிமன்றமே விசாரணைக் குழுவை நியமித்துவிட்டது.

– Subha Lakshmi Pazhani –

Share: