முதல்வர் ஸ்டாலின் தி.க உட்பட யாரையும் நம்ப மாட்டார் | Chanakyaa Article

முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, காங்கிரஸ் – மதிமுக – கம்யூனிஸ்ட்கள் – விசிகே என யாரையும் நம்ப மாட்டார். ஏன் தி.க உட்பட!

 

காரணம், இவர்கள் எல்லோருமே அதிமுகவோடு இருந்து, செல்வி.ஜெயலலிதாவை போற்றியவர்கள். அதுமட்டுமல்ல, திருமதி.சசிகலா சிறை செல்லும் வரை, நிபந்தனையில்லாமல் அவரை ஆதரித்தவர்கள்.

இன்று திமுகவுக்கு எதிராக உள்ள அதிமுகவோடு பாஜக இருப்பதாலும், அங்கே தங்களுக்கு வசதியான தலைமை இல்லாத காரணத்தால் மட்டுமேதான், தன்னோடு இருக்கிறது இந்த தோழமைகள் எனத் தெளிவாக ஸ்டாலின் அறிவார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி போல, கூட்டணி கட்சிகளை வளர்த்துவிடும் வேலையை இன்றைய திமுக தலைமை செய்யாது. அவர்களுடைய மன உறுதியையும், பலத்தையும் எவ்வளவு குறைக்க முடியுமோ அந்த அளவு குறைத்துவிடுவார்.

ஒரு நாள் அவர்கள் வெளியேற நினைக்கும் போது, நிச்சயமாக அவர்களுக்கென்ற தனித்தன்மை இல்லாமலிருக்கும்..இந்த விவகாரத்தில் ஸ்டாலினுடைய தலைமை வென்று கொண்டிருக்கிறது என்பதே நிஜம்.

– சுந்தரராஜ சோழன் –

Share:

Leave a Reply

Your email address will not be published.