யோகி வெற்றி பெற்றது மோடிக்கு அதிருப்தி என்றெல்லாம் உருட்டுகிறார்கள். ஏனென்றால் மோடிக்கு மாற்றாக நாளை பிரதமராகிவிடுவாராம் யோகி..😄

யோகி வெற்றி பெற்றது மோடிக்கு அதிருப்தி என்றெல்லாம் உருட்டுகிறார்கள். ஏனென்றால் மோடிக்கு மாற்றாக நாளை பிரதமராகிவிடுவாராம் யோகி..😄

உண்மையில் அப்படி நடந்தால் முதலில் மகிழ்பவர் மோடி தான். அதை மனதில் வைத்து, தனக்கு பிறகு பல தலைவர்கள் பாஜகவை வழிநடத்த வேண்டும் என்ற ஒரே காரணத்தால் தான், நேரடியாக ஆர்எஸ்எஸ்காரர்களை முதல்வராக கொண்டு வருகிறார் நரேந்திர மோடி. பட்னவிஸ் – கட்டார் எல்லோரும் ஒரு உதாரணமே.

இந்தியாவின் ஹிருதய பகுதியில், ஒரு அடர்காவி அரசியல் பேசும் மடாதிபதியை இந்த அளவுக்கு உயர்த்திப் பிடித்து, அவர் மேல் வளர்ச்சி அரசியலை நிலைநிறுத்தி, நாயக பிம்பம் தருவதே, நாளைய ‘ஹிந்து ஹிருதய் சாம்ராட்’ யோகி என்பதை அறிவுறுத்தவே..

இன்று பாஜக தொண்டர்களிடம் ஒரு ‘திரிசூல’ மனநிலை நிலைநின்றுள்ளது. அது ‘மோடி – அமித்ஷா – யோகி’ என்பதாக. இவர்கள் மூவரையும்தான், தங்கள் ஆதர்ஷ புருஷர்களாக எடுத்துக்கொள்கிறார்கள்..

“யோகியை வருங்கால பிரதமர் என சொல்வது இயல்பானது; அது அவருடைய உழைப்பிற்கான அங்கீகாரம்” என, உள்துறை அமைச்சர் அமித்ஷாவே சொன்னார். அதுமட்டுமல்ல, “2024ல் மோடி ஆட்சி மீண்டும் அமைய 2022ல் யோகியின் ஆட்சி உ.பியில் அமைய வேண்டும். ஏனென்றால்,டெல்லிக்கு செல்லும் பாதை லக்னோ வழியாக” என்றார்.

ஆக, யோகி வருங்கால பிரதமர் என்பது மக்களுடைய விருப்பம். எப்படி 2009லேயே அடுத்த பிரதமராக மோடிதான் வர வேண்டும் என்று மக்கள் பேச ஆரம்பித்தார்களோ அதே போல இப்போது யோகியை பற்றி பேசுகிறார்கள்..

அடல்பிஹாரி வாஜ்பாயின் ரத்த உறவில் வந்த சகோதரன் அல்ல லால் கிருஷ்ண அத்வானி;
அத்வானியின் மகனல்ல நரேந்திர தாமோதரதாஸ் மோடி;
மோடியின் உடன்பிறந்த சகோதரன் அல்ல யோகி..

இங்கே வாஜ்பாயை அத்வானியும், அத்வானியை மோடியும், மோடியை யோகியும், யோகியை பட்னவிஸும், ஒருநாள் பட்னவிஸை அண்ணாமலையும் வந்து மாற்றுவார்கள்; அந்த இடத்தை நிரப்புவார்கள். இது தொடரும்.

காரணம் ஒன்றுதான், பாஜக குடும்பக் கட்சியோ அல்லது மொழி – இன – ஜாதியை தூக்கிப் பிடிக்கும் கட்சியோ இல்லை. பாரதத்தின் ஆன்மாவை காப்பவன் யாரோ? அதன் பெருமையை நிலைநிறுத்துபவன் யாரோ அவர்களை காலமே கொண்டு போய் அங்கே வைக்கும். ஜனங்களின் ஆட்சியில், அவர்களால் தரப்பட்ட செங்கோலை உயர்த்திப் பிடிக்கும் மன்னன் அரியணை ஏறுவான்.

– சுந்தரராஜ சோழன் –

Share:

Leave a Reply

Your email address will not be published.