விஸ்வகுரு இந்தியா

உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்டில் நடைபெற்ற,ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் ரஷ்ய – இந்திய இருமுனை பேச்சுவார்த்தை நடந்தது.அதில் மோடி பேசியது மேற்கு நாடுகளால் வெகுவாக சிலாகிக்கப்படுகிறது..ஆனால், அவர்கள் முன்னிறுத்துகிற த்வனியில் அவர் பேசவில்லை.
புடினை மோடி கண்டித்தார் என்கிற தலைப்புகள் மேற்குலகின் ஆசை,ஆனால் மோடி தன் கவலையை மட்டுமே தெரிவித்தார்.அதுமட்டுமில்லாமல் தனிப்பட்ட முறையில்,தொடர்ச்சியாக இதை புடினிடம் வெளிப்படுத்தியதாக மோடியும் சொன்னார்,அதை புடினும் ஏற்றுக் கொண்டார்.
‘இது போருக்கான யுகமல்ல!’ என்று மோடி சொன்னது புடினுக்கான வார்த்தை மட்டுமல்ல,உலகத்திற்கான வார்த்தை.அதை புடின் மீது மட்டுமே திணிக்கும் அயோக்கியத்தனத்தை மேற்குலகம் செய்கிறது..
உக்ரைனை மேற்குநாடுகள் தங்களின் சாளரமாக,படைத்தளமாக பயன்படுத்த நினைத்த திட்டத்தை முறியடித்த ஆசிய வீரனாகவே தன்னை புடின் முன்னிறுத்துகிறார்.இந்தியா – சீனாவின் துணையில்லாமல்,தார்மீக பலமில்லாமல் இதை ரஷ்யாவால் செய்ய முடியாது என்று மேற்கு நாடுகள் உறுதியாக நம்பின..
ஆனால்,மோடி உக்ரைன் போர் பற்றி புடின் முகத்துக்கு நேரே பேசியது அவர்களை ஆச்சர்யப்பட வைத்தது.மீண்டும் மோடி அவர்களால் கணிக்க முடியாத தலைவராக இந்த இடத்தில் எழுந்தார்.மேற்கு தனக்கான தூதுவர்களாக,அடிமைகளாக, தாங்கள் சர் பட்டம் தரும் திவான்களாக மட்டுமே இதர நாடுகளை பார்க்கிறது.
ஒரு காலனித்துவ எதிர்ப்பரசியலை இந்தியாவிலிருந்து அவர்கள் எதிர்பார்த்ததே இல்லை.அதுவும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் ஒரு குஜ்ஜூவை அறியும் திறன் அவர்களுக்கு இல்லை..நிற்க.
இந்தியாவின் சுயநலம் யாருடைய அழிவை மையப்படுத்தியும் இல்லை.எங்கே ஆசிய நன்மை முக்கியம்,எங்கே இந்திய நலன் அவசியம் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி தெளிவாக உள்ளார்.இந்திய நலன் என்பதில் 100% எதிரி என்று எப்படி யாரையும் பார்க்கவில்லையோ,அதுவேதான் நண்பன் என்கிற அளவுகோலுக்கும் பொருந்தும்.
ஆசியாவில் மேற்குலகத்தின் ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது என்பது எந்த அளவுக்கு உண்மையோ,அதே அளவு ஆசியாவை ஆக்ரமிக்க சீனாவையும் விட முடியாது.இந்த இருபுள்ளியில் நட்பும் பகையும் ஊசலாடுகிறது.இந்த இடத்தில்தான் எல்லோருக்குமே இந்தியா தேவை என்கிற நிலையும் உள்ளது.
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் மனஉறுதி இல்லாத,சுயசிந்தனை அற்ற தலைமைகள் இருந்தால்? இந்தியா ஒன்று அரசியல் பலியாகியிருக்கும் அல்லது ஆட்டத்திலேயே இல்லாமலாகியிருக்கும்.நரேந்திர மோடி என்னும் தலைவனின் கீழ் இந்தியா உலகத்தின் குருவாக மாறுவதை தெளிவாக பார்க்க முடிகிறது.அதை மோடி மற்றும் புடினின் உடல்மொழியே காட்டுகிறது..
– சுந்தர்ராஜ சோழன் –

Share: