பரம்பரியமே நமது பெருமை

– சுந்தரராஜ சோழன் –

ரஷ்யா 80% கீழைத்தேய மரபுவழி கிருஸ்த்தவத்தை பின்பற்றும் நாடு. 1917ல் போல்ஷ்விக் கலகக்காரர்கள் அந்நாட்டை கைப்பற்றும் வரை, ஜூலியன் காலண்டர் தான் அங்கே பின்பற்றப்பட்டது. லெனின் அதிகாரத்தை அடைந்து தான் கிரிகோரியன் காலண்டரை அறிமுகப்படுத்துகிறார் ரஷ்யாவுக்கு.

ஆனால் இன்றும் அன்றாட வாழ்வில் ஜூலியன் படியே மரபார்ந்த விழாக்களை மக்கள் கொண்டாடுகிறார்கள். ரஷ்ய அதிபர் புடினே தன்னுடைய கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தை, ஜனவரி 7 அன்றுதான் செய்கிறார். அதிகாரப்பூர்வ ரஷ்ய அரசாங்கம், ஜனவரி 14ஐ ரஷ்ய புத்தாண்டு பிறப்பாக கொண்டாடுகிறது.

இந்த பாரம்பரிய புத்தாண்டையும், பாரம்பரிய கிருஸ்துமஸ் விழாவையுமே பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் அங்கே கொண்டாடுகிறார்கள். இதற்காக டிசம்பர் 25ஐயும், ஜனவரி 1ஐயும் அவர்கள் புறக்கணிக்கவில்லை.அதையும் கொண்டாடுகிறார்கள்.

தன் பாரம்பரியத்தை மறக்காமல், கைவிடாமல் அவர்களால் மற்றவற்றையும் ஏற்க முடிகிறது. ஒரு இயந்திரத்தன பொதுத்தன்மை என்பது வேறு, நமது செழிப்பான உயிரோட்டமுள்ள தனித்தன்மை என்பது வேறு. இதையேதான் ஆளுநர் R.N.ரவி, பாரதியாரின் நட்சத்திர பிறந்தநாளை கொண்டாடிய நிகழ்வையும் பார்க்கிறேன்.

கோவிலுக்கு போவது, இனிப்பு செய்வது, புதுத்துணி உடுப்பது என அனைத்தையும் நட்சத்திர பிறந்தநாளில் வீட்டோடு கொண்டாடுவோம். அதே சமயம் ஆங்கிலத் தேதியில் வரும் பிறந்தநாள்தான் பொதுவில் உள்ளது. அதை புறக்கணிக்கவில்லை. இப்படித்தான் பல கோடி இந்துக்கள் இருப்பதாகக் கருதுகிறேன்..

நமது வேர் எங்கே உள்ளது என்பதை பகிரங்கமாக சுட்டிக்காட்ட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். மற்றபடி அந்த வேரில் நின்றபடியே நம் கிளை நுனிகள், வானத்தை தொட எந்த தடையும் இல்லை.

Share: