கோயில்கள் அரசியல் களமாக மாறும் அறிகுறிகள் அதிகமாகிவிட்டது.

ஏற்கனவே நிலை அப்படித்தான். இனிமேல் வேகமெடுக்கும் போல் தெரிகின்றது.

இந்து தர்மம் பற்றி உயர்வாக பேசுவதில் நீ /நான் என போட்டி நடக்கும் என சிலர் எதிர்ப்பார்கிறார்கள்……

ஆனால், மற்ற மாநில மக்கள் மனோநிலைக்கும், தமிழக மக்கள் மனோநிலைக்கும் வித்யாசம் உண்டு….

இங்கே மூன்று தலைமுறை நாத்திகத்தில் / நாத்திக கொள்கையில் வந்த தமிழகத்தில் அடிப்படை ஆன்மீக சமய #கோயில்புரிதலை ஏற்படுத்தாமல், இந்து தர்மம் என பேசவைத்தால் விளைவுகள் விபரீதமாகவே இருக்கும்….

ஒரு கோயில்குடியாக என் பார்வையில்,

கோயில்கள் அரசியல்களமானால்,

சம்பிரதாயங்கள் இப்பொழுதைவிட அதிகமாக மீறப்படும் / மாற்றப்படும்…

கோயில் சார்ந்த விளம்பர செயல்பாடுகளில் மட்டுமே நீ / நான் என கட்சிகளிடையே போட்டி நடக்கும்.

மிச்சசொச்சம் உள்ள கோயில் சார்ந்த மரபு தத்துவம் / புராணங்களுக்கு இருபக்கமும் கட்சி கொள்கை சார்ந்த வேறு வேறு கட்டமைப்பு தரப்படும்…

ஏற்கனவே மரபான கோயில்குடிகள் வெளியேறிவிட்டார்கள். மிச்ச சொச்ச கோயில்குடிகளும் இந்த போட்டியில் நசுங்கி வெளியேறிவிடுவார்கள்….

ஆக, கோயில் இருக்கும். சம்பிரதாயம் எதுவும் இருக்காது…
கோயில் விளம்பர செயல்பாடுகளுக்கு இனி பஞ்சம் இருக்காது….
கோயில்கள் கண்காட்சி சின்னமாக மாறும்…

– கார்த்திகேய சிவம் –

Share: