சத்தீஸ்கரின் முதல் பழங்குடி முதல்வரை நியமித்து சமூகநீதியை பேணும் பா.ஜ.க; கள்ள மெளனம் காக்கும் தமிழக அரசியல் கட்சிகள்!..

சாணக்யா  avatar   
சாணக்யா
சத்தீஸ்கரின் முதல் பழங்குடி முதல்வரை நியமித்து சமூகநீதியை பேணும் பா.ஜ.க; கள்ள மெளனம் காக்கும் தமிழக அரசியல் கட்சிகள்!..



சத்தீஸ்கர் மாநிலத்தில் 35% மக்கள் பழங்குடியினர், அங்கு திரு.விஷ்ணுதியோ சாய் எனும் முதல் பழங்குடியின முதல்வரை நியமித்து சமூகநீதியை மிகச்சரியாக நிலைநாட்டியுள்ளது பா.ஜ.க. நிற்க. இந்நாட்டின் ஜனாதிபதி உயர்திரு திரெளபதி முர்மு துவங்கி ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் திரு.அர்ஜூன் முண்டா, அஸ்ஸாம் முன்னாள் முதல்வரும் தற்போதைய மத்திய கேபினட் அமைச்சர் திரு.சர்பநந்தா சோனாவால் என பழங்குடியினருக்கு உச்சக்கட்ட அரசியல் அதிகாரத்தை வழங்கி அழகு பார்த்த/பார்க்கும் ஒரே இந்திய அரசியல் கட்சி பா.ஜ.க என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நியமனத்தை சமூகநீதி பேசும் தமிழக கட்சிகள் ஒருவராவது மனமுவந்து பாராட்டினரா? இல்லை. ஏனெனில், இவர்களின் போலி சமூகநீதி சாயம் வெளுத்து விடுமே? அதனாலேயே இத்தகவலை கூட வெளியே தெரிய விடாமல் மறைத்து விடும் திராவிட ஊடகம்.

இது போக திரு.விஷ்ணுதியோ சாய் அவர்களின் நியமனம் பா.ஜ.க தொண்டர்களுக்கு, குறிப்பாக இளந்தலைவர்களுக்கு மிகப்பெரிய அனுபவ பாடம். 2014 - 2019 முதல் மோடி அரசில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர் இவர், பிறகு 2019-ல் எம்.பி சீட் கூட இவருக்கு வழங்கப்படவில்லை. ஆனால் அவர் சோர்வடையவில்லை, தொடர்ந்து கட்சிப்பணியாற்றி வந்தார். பின் 2020-ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநில தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு வேறு மாநில தலைவர் நியமிக்கப்பட்டார். அப்போதும் மனம் சோராமல், கட்சிப்பணியை மட்டுமே செய்து வந்தார். தனது பகுதியில் கட்சி கட்டமப்பை பலப்படுத்திய இவருக்கு, இதோ தற்போது தேடி வந்துள்ளது முதல்வர் பதவி. 1980-ஆம் ஆண்டு பா.ஜ.க-வில் பஞ்சாயத்து தலைவராக துவங்கிய அரசியல் வாழ்க்கை இன்று முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்துள்ளது.

இதில் இன்னொரு சுவாரஸ்யம், திரு.விஷ்ணுதியோ சாயை முதல்வராக பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் முன்மொழிந்தது யார் தெரியுமா? இதே சத்தீஸ்கரில் 2003 முதல் 2018 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் பா.ஜ.க முதலமைச்சராக மிகச்சிறப்பாக சேவை செய்த திரு.ரமன் சிங் அவர்கள். முன்மொழிந்தது மட்டுமின்றி கட்சி கேட்டுக்கொண்டதால் அவர் தற்போது 18 ஆண்டுகள் முதல்வராக இருந்தும், புதிய சட்டபேரவையில் சபாநாயகராக செயல்பட சம்மதம் தெரிவித்துள்ளார். வேறு ஏதேனும் கட்சியில் இக்காட்சிகளை தான் காண முடியுமா?

பா.ஜ.க தொண்டன் என்பதில் பெருமையும், கர்வமும் கொள்வோம். பிரதிபலன் பாராது, தொடர்ந்து ஆத்மார்த்தமாக இயக்கப்பணியாற்றுவோம், பா.ஜ.க-வில் அங்கீகாரம் தானாக வரும்.

                                                          - Dr. SG சூர்யா
                                                         மாநிலச் செயலாளர், பாரதிய ஜனதா கட்சி

No comments found