நா வரேன் தனியா... TIME TO LEAD...?

சாணக்யா  avatar   
சாணக்யா
 
நா வரேன் தனியா...
TIME TO LEAD...?

நா வரேன் தனியா...

TIME TO LEAD...?


- மீரா - H -


இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தல்களை விட 2026 -ல் வரவிருக்கும் தேர்தல், பல்வேறு அதிரடிகளைக் காண இருக்கிறது. திமுக, அதிமுகவுக்கு இடையில் மட்டுமே இருந்த போட்டி, இம்முறை பெரிய மாற்றம் காண உள்ளது. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி, நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம், என பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிற நிலையில், விஜயின் அரசியல் வருகை, ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் 'தளபதி' என அனைவராலும் கொண்டாடப்பட்டுவரும் Mass நடிகர் Vijay. தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழில் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் இவரின் திரைப்படங்கள் வெளியிடப்பட்டு, கட்டுக்கடங்காத காளைகளை ரசிகர்களாக சம்பாதித்தது மட்டுமில்லாமல், கடல் கடந்து பெருமைகளையும் சம்பாதித்தவர் விஜய்.

விஜயின் தந்தை, இயக்குனர் S. A. Chandrasekhar மூலம் 'நாளைய தீர்ப்பு' எனும் திரைப்படத்தின் மூலம், திரையுலகில் காலடி எடுத்துவைத்த விஜய், 'மாண்புமிகு மாணவன்' படத்தில் அரசியல் பேசத் தொடங்கினார். 'செந்தூரபாண்டி' படத்தில் 'இளையத் தலைவன்' என விஜய்க்கு பெயர் சூட்டிய S. A.C, 'ரசிகன்' படத்தில் தன் மகனுக்கு 'இளைய தளபதி' என பெயர் சூட்டினார். அன்று தொடங்கி 'பைரவா' படம் வரை 'இளைய தளபதி' -யாக திரையுலகில் வலம் வந்தார் விஜய்.

2006 -ம் ஆண்டு January 12, பொங்கல் பண்டிகைக்காக மத்திய அரசு சார்பில் சிறப்பு அஞ்சல்தலை வெளியீட்டு விழாவில் தயாநிதி மாறன் முயற்சியால் கலந்துகொண்ட விஜய், புதிய அஞ்சல் தலையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இந்த சம்பவம் பல அரசியல் கேள்விகளை எழுப்பியது.

'அழகிய தமிழ் மகன்' படத்தில் விஜய் 'சிகரெட்' பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றன. இதற்கு பாமக தலைவர் அன்புமணி அதிருப்தி தெரிவித்த நிலையில், 'இனி, என் படங்களில் 'சிகரெட்' காட்சிகள் இடம்பெறாது என அறிவித்து, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்.

ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக்கி அதற்காக, தனி கொடி என உருவாக்கி, தனது அரசியல் ஆசையை வெளிக்காட்டினார் விஜய். S. A.C -யின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டன விஜயின் நற்பணி மன்றங்கள்.

2008 -ம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்த விஜய், பிரதமருக்கு 'ஒரு கோடி கடிதங்கள்' அனுப்புமாறு ரசிகர்களிடம் சொன்னார். தளபதியின் சொல்லை வேதவாக்காக ஏற்று 25,000 கடிதங்கள் பிரதமரை சென்றடைந்தாக கூறப்படுகிறது. இலங்கை தமிழர்களுக்கான உரிமையை மீட்க, காங்கிரசுக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் விஜய், திடீரென டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்தது பலரை வியப்புக்கும், விமர்சனத்துக்கும் ஆளாக்கியது. இதற்கு, ராகுல் காந்தியும் விஜயும் E -Mail மற்றும் தொலைபேசியின் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், டெல்லியில் நடந்த சந்திப்பு நட்பு ரீதியானது என விளக்கம் கொடுத்து, அனைவரின் வாயையும் Off செய்தார் S.A.C.

பின்பு, நடந்த செய்தியாளர் சந்திப்பில் 'ராகுலுக்கும் அவருக்கும் இருந்த பொதுவான நண்பரின் மூலம் அழைப்பு வந்ததால் Shooting -ஐ Cancel செய்துவிட்டு SAC -யுடன் சேர்ந்து அவரை சந்திக்க சென்றதாகவும், அவரிடம் பேசிய ஒரு மணி நேரம் பெருமைக்குரியது எனவும் குறிப்பிட்டுயிருந்தார். பின்னர், விஜய் கேட்ட இளைஞர் அணி பதவியை காங்கிரஸ் தர மறுத்ததாக எழுந்த சர்ச்சையில், ''நாட்டின் நலனுக்காக யார் செயல்பட்டாலும் அவர்களுடன் கைகோக்க தயார்'' என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். அதனை தொடர்ந்து இவர் ஜெயலலிதா, EPS, பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த மோடி என அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்ததன் மூலம், தனது அரசியல் வருகையை சூசகமாக வெளியிட்டு வந்தார்.

2012 -ல் வெளியான 'துப்பாக்கி' படத்தின் காட்சிகளால் சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், சில காட்சிகள் நீக்கப்பட்ட பின்னரே படம் வெளியானது. 2013 -ல் வெளியான 'தலைவா' திரைப்படத்தில் 'TIME TO LEAD' எனும் வார்த்தையால் அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுகவின் கோபத்திற்கு ஆளாகி பின்பு, சமாதான புறாக்களை பறக்கவிட்டார் விஜய். 2017 -ல் அட்லீ இயக்கிய 'மெர்சல்' படத்தில் 'கோவில்களுக்கு பதிலாக மருத்துவமனையை கட்டுங்கள்' எனும் வசனம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக தலைவர் H.Raja அவரை Joseph Vijay என மதரீதியாக அவரின் பெயரை சுட்டிக்காட்டியதும், இதற்கு பதிலடி கொடுக்கும் அறிக்கையில், 'Joseph Vijay' என தன் முழு பெயரை குறிப்பிட்டிருந்தார் விஜய்.

அடுத்தடுத்து பல சிக்கல்களை சந்தித்தன விஜயின் திரைப்படங்கள். அரசியலுக்கான தயாரிப்பாகவே அவர், மக்கள் இயக்கத்தை தொடங்கி தொடங்கியுள்ளார் என சொல்லப்பட்டாலும் , அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் எந்த அரசியல் கூட்டத்தையும் நடத்தவில்லை. இந்த நிலையில், இலங்கை ராணுவத்தால் நாகை மீனவர் சுடப்பட்டதால், கண்டன போராட்டம் நடத்தி விஜய் மக்கள் இயக்கத்தின் முதல் கூட்டமாக அறிவித்தார் விஜய். அதில் பேசிய இவர் 'நா, அடிச்சா தாங்க மாட்ட 4 மாசம் தூங்கமாட்ட.. எனும் பாடலை பாடி, வரைபடத்தில் இலங்கை காணாம போய்டும்.. இந்த கூட்டத்திற்கு நான் தமிழனாக வந்துளேன்.. இதற்கு, யாரும் அரசியல் சாயம் பூசவேண்டாம் என்று திரையில் மட்டுமில்லாமல் தரையிலும் உணர்ச்சிபொங்க பேசினார் விஜய் இதை தொடர்ந்து, தனது 50 -வது படமான 'சுறா' படத்தில் மீனவர்களின் கதையை கையில் எடுத்தது, இவரின் முக்கியமான அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.

சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், 'என் ரசிகர்களை வைத்தே நான் வளர்ந்தேன். என்னை வைத்து என் ரசிகர்கள் வளரவேண்டும்' என அவர் சொன்னதும் அரசியல் என புரிந்துகொண்டு அவரின் ரசிகர்கள் ஆர்பரிக்க தொடங்கிவிட்டனர். அதனை தொடர்ந்து டெல்லியில் "Anna" Hazare நடத்திய போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்தார் விஜய். இப்படி, இலை மறை காய் மறையாக தனது ஆசைகளை வெளிப்படுத்தி கொண்டிருந்த நிலையில், தனது திரைப்பட வாழ்க்கைக்கு கமா போட்டு, அரசியல் வாழ்கைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் விஜய். 2024 பிப்ரவரி 2 அன்று 'தமிழக வெற்றி கழகம்' எனும் தனது கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்து, பதிவும் செய்துள்ளார். முன்பு H RAJA எழுந்த சர்ச்சையில் 'Joseph Vijay' என அறிக்கை வெளியிட்ட அவர் தற்போது, 'விஜய்' என்று மட்டுமே தனது பெயரை போட்டு அறிக்கைகளை வெளியிடுகிறார்.

2026 -ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் களத்தில் இறங்கப்போவதாக வெளியிடப்பட்ட அறிக்கையால், சீமானுடன் கூட்டணி வைப்பாரா? தனித்து போட்டியிடுவாரா? என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இதுவரை, திரைப்படங்கள் மற்றும் Audio Launch -களில் 'KUTTY STORY' -யாக அரசியல் பேசி வந்த நிலையில், களத்தில் இறங்கி அரசியல் செய்யப்போகிறார் விஜய். இதுவரை ரசிகர்களை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்த விஜய் 2026 -ல் முதன்முதலாக Play ground -ல் இறங்கி 'கில்லி'யாக 'கபடி.. கபடி' விளையாட போகிறார். 2026 -ல் பார்ப்போம் தளபதியின் 'சர்க்கார்' அமையுமா, என்று!

No comments found