இனி இதற்கெல்லாம் மரண தண்டனையா!? இந்தியாவை அதிரவைத்த அமித் ஷா!......

சாணக்யா  avatar   
சாணக்யா
இனி இதற்கெல்லாம் மரண தண்டனையா!? இந்தியாவை அதிரவைத்த அமித் ஷா! - வீரசெல்வி - ......

"தாமதிக்கப்பட்ட நீதி; மறுக்கப்பட்ட நீதி" இந்த சொல்லாடல் இனி இருக்கவே கூடாதென, மத்திய அரசு அதிரடியாக பல மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது.. இந்தியாவே அதிர்ந்துபோகும் அளவிற்கு இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில், ஒரு சம்பவத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தார்.. நாடே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை உற்று பார்த்துக்கொண்டு இருந்தபோது, அவர் ஏற்கனவே இருந்த Indian Penal Code, Code of Criminal Procedure மற்றும் Indian Evidence Act ஆகியவற்றின் பெயர்களை மாற்றம் செய்து மசோதாக்களை தாக்கல் செய்தார்.. பெயர் மட்டுமா மாற்றம் செய்யப்பட்டது?

IPC எனப்படும் Indian Penal Codeஐ, Bharatiya Nyaya Sanhitaவாக மாற்றம் செய்யவும், CrPC எனப்படும் Code of Criminal Procedureஐ, Bharatiya Nagarik Suraksha Sanhitaவாக மாற்றம் செய்யவும், Indian Evidence Actஐ Bharatiya Saakshyaவாக பெயர் மாற்றம் செய்வும் மூன்று மதோசாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டும் இல்லாமல், புதிய IPCயான Bharatiya Nyaya Sanhitaவின் கீழ் மொத்தம் 356 Section கள், புதிய CrPCயான Bharatiya Nagarik Suraksha Sanhitaவின் கீழ் மொத்தம் 533 section கள், Bharatiya Sakshyaவின் கீழ் 170 section கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது ஏன்?

1860 துவங்கி இன்று வரை, ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்கள் உருவாக்கிய கிரிமினல் சட்டங்களை தான் இந்தியா பின்பற்றி வருவதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் கூறினார். அப்படியானால் நாம் இப்போது கடைபிடிக்கும் சட்டங்கள் எப்போது கொண்டுவரப்பட்டது?

1982 ஆம் ஆண்டு, Thomas Babington Macaulay என்பவரால் IPC மற்றும் CrCP உருவாக்கபட்டது. பின்னர் 1872இல் Indian evidence Act உருவாக்கப்பட்டது. அந்த சட்டங்கள் எல்லாம் இந்தியர்களை அடிமைகளாக நினைத்து, ஆங்கிலேயர்கள் உருவாக்கியவை. நீதியை விட தண்டனைகள் மட்டுமே குறிக்கோளாக இருந்தது. இந்த சட்டங்கள் கூறும் தண்டனைகளை கண்டு இந்தியர்கள் அஞ்சவேண்டும் என்பது மட்டுமே ஆங்கிலேயர்களின் எண்ணமாக இருந்தது. அதே சட்டங்களைத் தான் நாம் இப்போது வரை கடைபிடித்து வருகிறோம். எனவே இந்த சட்டங்களில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்ததாக அமித் ஷா கூறினார்.

இனிமேல் 420 (four twenty) கிடையாது. 144 (One forty four) கிடையாது. 302 (three not two) கிடையாது. நமக்கு பரிட்சயமான இந்த சட்டங்கள் எதுவும் கிடையாது. ஏமாற்று வேலை செய்பவர்களை தண்டிக்கும் சட்ட பிரிவு 420, இனிமேல் பிரிவு 316ஆக மாறுகிறது. அதேபோல கலவரங்களை தவிர்க்க போடப்படும் 144 இனிமேல் 187ஆக மாறுகிறது. கொலை செய்பவர்களை தண்டிக்கும் 302, இனிமேல் 101ஆக மாறுகிறது.

இதெல்லாம் ஒரு புறமிருக்க, பல குற்றவழக்குகளில் தண்டனை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. யாரேனும் எழுத்து மூலமாகவோ, வார்த்தை மூலமாகவோ, டிஜிட்டல் முறையிலோ நாட்டிற்கு எதிராகவோ, பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலோ, நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால், அவர்களுக்கு ஆயுள் தண்டனையோ, 7 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது அதற்கு மேலோ விதிக்கப்படும். அதேபோல மத வேற்றுமைகளை மையப்படுத்தி, வெறுப்பை பரப்புவோருக்கு 3 ஆண்டுகால சிறைத்தண்டனையோ அதற்கு மேலோ விதிக்கப்படும்.

தெரிந்தோ தெரியமலோ வாகன விபத்தினால் ஒருவர் உயிரிழந்தால், வாகனத்தை ஓட்டியவருக்கு, பழைய IPC படி மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையோ, அபாரதமோ விதிக்கப்பட்டது. ஆனால், புதிய Bharatiya Nyaya Sanhita படி 7 ஆண்டுகளோ அதற்கு மேலாகவோ தண்டனை வழங்கப்படும். ஒருவேளை விபத்தில் ஒருவரை உயிரிழக்க செய்துவிட்டு, விபத்தை செய்தவர், காவல்துறையிடம் தகவல் தெரிவிக்காமல் இருந்தால், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இவையெல்லாம் வெறும் Trailer தான். main picture முழுக்க முழுக்க பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான பாதுகாப்பை மையப்படுத்தியே இருக்கிறது.

தன்னை பற்றிய உண்மைகளை மறைத்து, காதலிப்பதாக கூறி, கல்யாணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்து, பாலியல் உறவில் ஈடுபட்ட பின்னர், ஒரு பெண்ணை ஏமாற்றினால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். அதேபோல 18 வயதுக்கு கீழ் இருக்கும் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம். 12 வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகளை வன்புணர்வு செய்பவர்களுக்கு 20 ஆண்டுவரை சிறை தண்டனையோ அல்லது மரண தண்டனையோ கூட விதிக்கப்படலாம்.

18 வயது நிரம்பாத பெண்ணை திருமணம் செய்துகொண்டாலோ, அவர்களோடு உடலுறவு கொண்டாளோ அது பலாத்காரமாகவே கருதப்படும். 15 வயதுக்குட்பட்ட சிறுமியை திருமணம் செய்து உடலுறவு கொண்டால், அவர்களும் POCSO வழக்கின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அதேபோல 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை ஒருவர், பாலியல் தொழில் ஈடுபதினாலோ, பாலியல் உணர்வை தூண்டும் படங்களில் நடிக்கவைத்தாலோ, பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தினாலோ, சிறுமிகளை இந்த குற்றங்களில் ஈடுபடுத்தியவர்களே அந்த குற்றங்களை செய்ததாக கருதப்படுவார்கள். அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். பாலியல் குற்றங்கள் செய்வதற்கே ஒருவர் நடுங்கும்படியாக சட்டங்கள் மாற்றப்பட்டு இருக்கிறது. இது இருபாலினத்தவருக்கும் பொருந்தும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

எல்லா குற்றத்திற்கும் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டும் என்றும், மீண்டும் 90 நாட்கள் தேவைப்பட்டால் அதை நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு வாய்தாகளுக்கு மேல் விசாரணை கூடாது என்றும் இந்த புதிய சட்டம் கூறுகிறது. இப்போது இருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் இனிமேல் 60 நாட்களாகவோ தேவைப்பட்டால் 90 நாட்கள் வரையும் கூட நீட்டித்துக் கொள்ளலாம்.

சட்ட மாற்றங்கள் அதிரடியாக இருக்கின்றன. இவற்றை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா என்பதிலும், சமூகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதிலும் தான் இருக்கிறது, உண்மையான மாற்றம் ! 

- வீரசெல்வி -

 

No comments found