அன்று MOSSAD! இன்று R&AW? உலகை அதிரவைக்கும் மோடி-தோவல் | Is R&AW the new MOSSAD? ..

சாணக்யா  avatar   
சாணக்யா
அன்று MOSSAD! இன்று R&AW? உலகை அதிரவைக்கும் மோடி-தோவல் | Is R&AW the new MOSSAD?

- அருண் ரமேஷ்


கடந்த சில நாட்களாக உலக அரசியலின் பேசுபொருளாக இருப்பது, இந்தியா- கனடா விவகாரம். ரஷ்யா- உக்ரைன் போரையும் மீறி, மேற்கத்திய உலகால் உற்று நோக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது இந்த மோதல். காலிஸ்தானி பிரிவினைவாதியான HARDEEP NIJJAR-ரின் மர்ம மரணத்தில், இந்தியாவின் நேரடி தலையீடு இருப்பதாகவும், கனடாவினுள்ளேயே கனடா குடிமகன் கொல்லப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது என்றும், அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தொடங்கி, கனடா அரசின் பிரிதிநிதிகள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆதாரத்தையே கொடுக்காமல் குற்றம் சுமத்திவரும் கனடாவின் போக்கிற்கு, இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்து வருவதால், இருநாட்டு உறவு, வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கனடாவின் இந்த குற்றச்சாட்டுகள், உண்மையா பொய்யா என்பது ஒருபுறம் இருக்க, இது இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் இமேஜை மேலும் வலுவாக மாற்றியுள்ளதாகவே வல்லுநர்கள் கருதுகின்றனர். அது எப்படி? இதோ பார்க்கலாம்.

இந்தியா என்றாலே சர்வதேச அரங்கில், "சாந்த சொரூபி", "அகிம்சையைப் பின்பற்றும் நாடு", "எவ்வளவு ஏறி அடித்தாலும், வாய்மொழி கண்டிப்போடு நிறுத்திக் கொள்ளும்" என்ற பிம்பம் இருந்தது. இதைக் கேட்டவுடன், "ஆமாம், காந்தி வழி வந்த நாம், அகிம்சையை தான் பின்பற்றுவோம், இதில் என்ன தவறு?" என நமக்கு கேட்கத்தோன்றும். ஆனால், 2008ல், மும்பையில் நடந்த கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரும், அமைதியை காத்தது, அகிம்சை ஆகாது. இதற்கும், மும்பை தாக்குதலுக்கு பழி தீர்க்க பாகிஸ்தானுக்குள் நுழைய தயாராக இருந்தது நமது விமானப் படை. ஏன் அன்றைய காங்கிரஸ் அரசால் அனுமதி அளிக்கப்படவில்லை? இங்குதான் வல்லுநர்கள் சொல்கிறார்கள், 2014க்கு முன்பிருந்த வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை Policy வேறு, 2014ல் பாரதப் பிரதமராக மோடி வந்த பிறகு, வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறையின் Policy-யே வேறு என்று.

ஆம், ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே, அதாவது 2015ல், மணிப்பூரில் ராணுவ வீரர்கள் மீது மியான்மரை சேர்ந்த கிளர்ச்சி படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, மியான்மருக்கு உள்ளேயே புகுந்து இந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியது. எல்லை தாண்டிய தாக்குதலான இதற்கு, Operation Hot Pursuit என பெயரிடப்பட்டது. பதான்கோட்-உரி பயங்கரவாத தாக்குதல்களுக்கு பிறகு 2016ல் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீருக்குள்ளேயே புகுந்து, இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது. இந்த தாக்குதலில் Launch Pad-களில் இருந்த 35 முதல் 40 பயங்கரவாதிகளும், 9 பாகிஸ்தானிய ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். இந்தியாவின் இந்த பதிலடியை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் திகைத்து மிரண்டுபோய் நின்றது. இந்தியாவின் இந்த பதிலடி தான் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. மேற்கத்திய நாடுகள் இந்தியாவை புது கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கின. இந்தியாவின் பிம்பமே மாறியது.

பின், 2019 பிப்ரவரி 14ல், காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ்-ஈ-மொகமத் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். நாடே கொதித்தது. உரி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு பிறகும், இப்படி ஒரு பயங்கரவாத தாக்குதல், அதுவும் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னர் நடத்தப்பட்டது, இந்திய அரசின் ஈகோ-வை சீண்டிப்பார்ப்பதாக அமைந்தது. எதிர்பார்த்தது போலவே, பதிலடி கொடுக்கப்பட்டது. ஆனால் இம்முறை தரை மார்க்கமாக அல்ல, வான்வழியாக. பிப்ரவரி 26ஆம் தேதி, எல்லையை தாண்டிய இந்திய போர் விமானங்கள், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பாலாகோட் பகுதியில் Air Strike நடத்தின. இதில், முன்களத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் இரண்டாவது முறையாக மிரண்டு நின்றது. ஆனால் இம்முறை ஏதாவது செய்தாக வேண்டும் என இந்தியாவிற்குள் இரண்டு போர் விமானங்களை அனுப்பியது. அவற்றை விரட்டியடிக்க இந்தியாவும் விமானங்களை அனுப்பவே, பதற்றம் தொற்றியது. அதில்தான், அபினந்தன், பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். அதுவும் எப்படி, பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பின், விமானம் நிலைதடுமாறியதால் விழுந்தார். அவரைக் கைப்பற்றிய பாகிஸ்தான், அதைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தபோது, இந்தியா விடுத்த எச்சரிக்கைக்கு பயந்து, அபினந்தனை விடுவித்தது. பிறகு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் இம்ரான் கான் கூறியபோதுதான் தெரிந்தது, இந்தியா எச்சரிக்கவில்லை, போர் தொடுப்போம் என மிரட்டல் விடுத்தது என்று. இந்தியாவின் மிரட்டலாலும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் போன்ற நாடுகளின் அழுத்தத்தாலு மே பாகிஸ்தான், அபினந்தனை விடுவித்தது.

இது இப்படி என்றால், Dடோக்லாம் மற்றும் Gகால்வானில், சீனாவுக்கு இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியையும், நாம் மறக்க முடியாது.

இந்த நிலையில் தான் காலிஸ்தான் விவகாரம் பூதாகரமானது. குறிப்பாக விவசாய சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் சுதாரித்துக்கொண்ட மத்திய அரசு, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் சேர்த்து காலிஸ்தானையும் ஒடுக்கும் வேலைகளில் இறங்கியது. அதாவது ஒட்டுமொத்தமாக, Anti-India நெட்வொர்க்கை ஒழிக்க முடிவு செய்தது. பாகிஸ்தான், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா என Anti-India நெட்வொர்க் இருக்கும் பல நாடுகளில், வரிசையாக Mastermind-கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.

கடந்தாண்டு நவம்பரில், காலிஸ்தானி பிரிவினைவாதியான Harwinder Rinda, லாகூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதே, உயிரிழந்தார். அதீத மருந்து கொடுக்கப்பட்டதன் பக்கவிளைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக பகீர் காரணம் கூறப்பட்டது. அடுத்த நாளே, இந்த Harwinder Rinda-வின் நெருங்கிய சகாவான Happy Sanghera, இத்தாலியில் கொல்லப்பட்டார். ஒரு சில மணி நேரத்தில், காலிஸ்தான் பயங்கரவாதி Kulwinderjit Singh Khanpuria, பேங்காக்கில் இருந்து டெல்லி அழைத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டார். பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் ஹிஸ்புல் முஜாஹிதீனை சேர்ந்த Bashir Ahmed Peer கொல்லப்பட்டார். அதே மாதத்தில், Al Badr-ரின் commander Syed Khalid Raza, கராச்சியில் கொல்லப்பட்டார். காஷ்மீரை குறிவைத்து நகர்வு மேற்கொண்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியான Aijaz Ahmad Ahangar, ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணத்தில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். மே மாதத்தில், Khalistan Commando Force-சின் Paramjit Singh Panjwar, பாகிஸ்தானின் லாகூரில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரிட்டனில் இந்திய தூதரகம், காலிஸ்தானிகளால் தாக்குதலுக்கு உள்ளானதற்கு மிக முக்கிய காரணமான காலிஸ்தான் பிரிவினைவாதியான Avtar Singh Khanda-வும் மர்மமான முறையில் உயிரிழந்தார். சமீபமாக, கனடாவின் சுரேவில் Hardeep Singh Nijjar கொல்லப்பட்டார்.

இப்படி வரிசையாக நடந்த மர்ம சாவுகள் அனைத்திற்கும், இந்திய தொடர்பே இருப்பதாக கருத்துருவாக்கம் உள்ளது. ஆனால் ஆதாரம் கிடையாது. இப்படி தடயமே இல்லாமல் எதிரிகளை போட்டுத் தள்ளுவது தான் "ரா"வான கொள்கை என.... ஆம் "RAW"வான கொள்கை என பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதுநாள்வரை, Soft Stateஆக பார்க்கப்பட்ட இந்தியா, நரேந்திர மோடி-அஜித் தோவல் comboவின் கீழ், "Hard State"-டாக மாறியுள்ளது என்பது, உலகளவில் இருக்கும் பார்வை. அதாவது, என்னை அழிக்க வேண்டும் என நீ யோசிக்கும்போதே உன்னை நான் ஒழித்து விடுவேன் என்பது தான், இதன் ஸ்டைல். இதை நம்ப வேண்டுமா என யோசித்தால், "இன்னும் ஒரு முறை மும்பை தாக்குதல் போன்ற ஒன்றை பாகிஸ்தான் நடத்தினால், அதனிடம் Bபலூசிஸ்தான் இருக்காது" என அஜித் தோவல் பேசியதை ஞாபகப்படுத்தி பாருங்கள். கதம் கதம்.

Rajkumar D
Rajkumar D 7 months ago
இப்படி ஒரு பிரதமரும், ஒரு பாதுகாப்பு ஆலோசகரும் இருப்பது, நாம் செய்த புண்ணியம். இவர்களின் கூட்டு தொடரட்டும்.
0 0 Reply
Kalyanaraman R
Kalyanaraman R 7 months ago
இதுதான் வேண்டும். இந்த "மிஷனில்" சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இவர்களை கைது செய்யவே பல லட்சங்கள் ஐயமும் காலத்தையும் விரயம் செய்யாமல் "கதம் கதம்" தான் மிகச்சிறந்த நடவடிக்கை.
1 0 Reply
Show more